கணினி, ஆங்கில அறிவைப் பரிசோதிக்க இலங்கையில் UTEL பரீட்சை

ministry-of-gigher-education-univerஉயர்கல்வியைத் தொடரும் மாணவர்களின் கணினி மற்றும் ஆங்கில அறிவு மட்டத்தைப் பரிசோதித்து தரச் சான்றிதழ் வழங்குவதற்கென UTEL என்ற விசேட பரீட்சையை உயர்கல்வி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

IELTS, TOEFL போன்ற சர்வதேச ஆங்கில தராதரப் பரீட்சைகளைப் போன்று, உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களின் ஆங்கிலம் மற்றும் கணினித்துறைத் தராதரத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்தப் பரீட்சை உயர்கல்வி அமைச்சினால் நடத்தப்படுவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய தொழில் உலகில் கணினி மற்றும் ஆங்கில மொழித் திறன் இரண்டுமே முக்கியமாக எதிர்பார்க்கப்படுவதால், உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் தமது மேற்படி இரண்டு திறன்களையும் மதிப்பிட்டு எதிர்பார்க்கப்படும் அளவுக்கு வளர்த்துக்கொள்வதற்கு இந்தப் பரீட்சை உதவும் என உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

University Test for English Language(UTEL) மற்றும் University Student’s Competency Test for Information Technology(UCTIT) ஆகிய இந்த இரண்டு பரீட்சைகளுக்கும் மாணவர்கள் இணைய மூலமாகவே(Online) தோற்ற முடியும் என்றும், இந்தப் பரீட்சைகளுக்குத் தோற்றுவதன்மூலம் மேற்படி திறன்களைக் கொண்டிருப்பதற்கான அங்கீகாரத்தை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2013/2014ம் ஆண்டுக்கான பரீட்சை முதற்தடவையாக ஏற்கனவே நடத்தப்பட்டபோது, 13,000 மாணவர்கள் இணையவழியாக இந்தப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், 2014/2015ம் ஆண்டுக்குரிய பரீட்சைகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

UTEL என்ற ஆங்கிலமொழித் தராதரப் பரீட்சையில் Listening, Speaking, Reading, Writing ஆகிய நான்கு ஆங்கில மொழித் திறன்களும் மதிப்பிடப்படப்படுகிறது. IELTS, TOEFL போன்ற சர்வதேச ஆங்கிலப் பரீட்சைகள் போன்றே இதற்கும் 0 முதல் 9 க்கு இடையில் தரநிலைப் புள்ளிகள் வழங்கப்படும்.

பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கில மொழியில் உரிய தேர்ச்சியைப் பெறாவிட்டால் அவர்கள் பட்டம் பெற முடியாது என்று அண்மையில் உயர்கல்வி அமைச்சு அறிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor