யாழ். நகரில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் மாணவிகள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ். மின்சார நிலைய வீதியில் நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற கட்டிடத்தின் ஒருபகுதி செவ்வாய்க்கிழமை பகல் ஒரு மணியளவில் இடிந்து விழுந்துள்ளது.
இந்த இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் இயங்கிவருகின்ற தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவிகள் மூவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த மாணவிகள் மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த இடிபாடு காரணமாக குறித்த கல்வி நிலையத்தின் ஒருபகுதி சேதமடைந்தள்ளது. இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தனியார் கல்வி நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது