கடை உரிமையாளரை தலைக்கவசத்தால் தாக்கிய பொலிஸாருக்கு அபராதம்

யாழில் பொதுமகனைத் தலைக்கவசத்தால் தாக்கிய குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறு இரண்டு பொலிசார் மீது யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ் சதீஸ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆவணி மாதம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரண்டு பொலிசார், மதுபோதையில் சென்று கடையொன்றில் 100 ரூபாவை கொடுத்து 04 சிகரட் தருமாறு கோரியுள்ளனர்.

அதற்கு கடை உரிமையாளர் 04 சிகரட்டுக்கள் 100 ரூபாவுக்கு வழங்க முடியாது என தெரிவித்ததை தொடர்ந்து, கடை உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி தலைக்கவசத்தால் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து இரண்டு பொலிசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டதுடன் நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த நீதவான் எஸ் சதீஸ்குமார், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளருக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தலா 25,000/= வீதம் இழப்பீடு செலுத்துமாறு உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: Editor