கடைகள் தீக்கிரை

கொடிகாமம் சந்தைக்குள் அமைந்துள்ள 3 வர்த்தக நிலையங்கள் இன்று சனிக்கிழமை (11) அதிகாலை தீக்கிரையாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

புடவை வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் பாய்கள் விற்பனை செய்யும் கடைகள் என்பனவே தீயால் எரிந்துள்ளன.

இவ்வனர்த்தத்தால் 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லையெனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.