கடைகள் தீக்கிரை: இருவர் கைது

யாழ். கொடிகாமம் சந்தைப்பகுதியில் 3 கடைகள் தீக்கிரையானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை சனிக்கிழமை (11) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தையில் அமைந்திருந்த புடவை வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் பாய்கள் விற்பனை செய்யும் கடைகள் சனிக்கிழமை (11) அதிகாலை தீக்கிரையாகின.

இதனால் 10 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையான பொருட்கள் அழிவடைந்தன.

இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த வேளையில் தொழில் போட்டி காரணமாக, கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.