கடல் ஆமை வைத்திருந்த இருவர் கைது

arrest_1குருநகர் பிரதேசத்தில் கடல் ஆமை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து 15 கிலோ கிராம் கடல் ஆமை இறைச்சி மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.