கடற்படையின் புதிய கட்டளைத் தளபதியாக எஸ்.எஸ்.ரணசிங்க!

இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளரால் அவருக்கான நியமனக் கடிதம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

அவரின் நியமனம் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா ஓய்வு பெற்றதையடுத்தே, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related Posts