கடற்படையினரால் வலைகள் அறுக்கப்படுவதாக மீனவர்கள் விசனம்

FishNetசேந்தன்குளம் பிரதேசத்தில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் வலைகள் கடற்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக தங்கள் தொழில் நடவடிக்கையினை மேற்கொள்ள விடாமல் கடற்படையினர் இடையூறுகளை ஏற்படுத்திவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கையில்,

‘வலித்தூண்டல் பிரதேசத்திற்கு நேராக வலைகளை விட்டு வந்தால் விடப்படுகின்ற வலை காட்டும் திசைக்கேற்ற தங்கள் பகுதிக்கு நேராக வந்து விடும். காலையில் சென்று வலைகளை எடுத்து வருவோம்.

கடந்த சில தினங்களாக தொழிலுக்குச் செல்லும் மீனவர்களை கடற்படையினர் கரைக்குச் செல்லுமாறும் இது எங்கள் பிரதேசதேசம், இதில் தொழில் நடவடிக்கை செய்ய முடியாது என்று விரட்டி வருகின்றனர்.

இதன் உச்ச கட்டமாக நேற்றைய தினம் எங்கள் பகுதியில் இருந்து தொழிலுக்குச் சென்ற மீனவர்களின் வலைகளை 10 என்ற இலக்கம் உள்ள படகில் வந்த கடற்படையினர் அறுத்துள்ளதுடன் அதனை எடுத்தும் சென்றுள்ளனர்.

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சொல்லனா துன்ப துயரங்களை அனுவித்து மூன்று வருடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நாம் வங்கிகளில் கடன்களைப் பெற்று இந்த தொழில் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு தொழில் செய்யவிடாமல் தடுப்பவர்கள் இப்பிரதேத்தில் ஏன் எங்களை மீளகுடியேற்றம் செய்தனர்.

இது தொடர்பில் சம்தந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor