கடற்படையினரால் மாதகல் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

N01(5)மாதகலில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் மாதகல் சங்கமித்த விகாரையில் கிடைக்கும் நிதியில் இருந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட நன்றாக கல்வி கற்கக் கூடிய இருபது மாணவ மாணவிகளை தெரிவு செய்து மாதாந்தம் எழுநாற்றி ஐம்பது ரூபா நிதி கல்விக்கான உதவியாக வழங்கி வருகின்றார்கள்.

மாதகல் சங்கமித்த விகாரையில் மாதகல் கடற்படை முகாம் பொறுப்பதிகாரி எ.தரங்கா தலைமையில் செவ்வாயக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண கடற்படைகளின் கட்டளை அதிகாரி அட்மிரல் உடவத்த பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவாகளுக்க உரிய பணத் தொகைக்கான சான்றிதழ்களை வழங்கியதுடன் பெற்றோர்களிடம் மாணவர்களின் ஊட்டத்திற்க்கான உணவுப் பொருட்களையும் கையளித்தார்.

Recommended For You

About the Author: Editor