கடத்தப்பட்ட அம்மன் சிலை மீட்பு

amman-mugam-bigயாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற பேரூந்தில் 9 அடி உயரமான பித்தளை அம்மன் சிலையொன்று பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போது, மாங்குளம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்படி சிலையை எடுத்துச் சென்ற பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.