கசூரினா கடற்கரையில் அடையாள அட்டை சோதனை

kasurna_beachகசூரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் அடையாள அட்டைகளை பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக காரைநகர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.

காரைநகர் கசூரினா கடற்கரையில் சமூக சீர்கேடுகள் நடைபெறுகின்றதால் பெற்றோர்கள் பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்துமாறு கசூரினா கடற்கரைக்கு சுற்றுலாவரும் 15 மற்றும் 20 வயதுடைய இளைஞர் யுவதிகள் சமூக சீர்கேடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். அதனால் அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதற்கான ஆவணங்கள் இன்றியும் இருக்கின்றார்கள்.

அண்மைக் காலங்களில் காரைநகர் கசூரினா கடற்கரையில், இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றதால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும், பிள்ளைகள் எங்கு செல்கின்றார்கள், யாருடன் செல்கின்றார்கள் என்பதனையும் அவதானிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேவேளை, கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடுபவர்களை கண்டால், பொலிஸ் நிலையத்திலும், அல்லது கசூரினா கடற்கரை மேற்பார்வையாளர்களிடம் முறைப்பாடு செய்யுமாறும் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.