கசூரினாக் கடற்பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

dead_water_bodyகாரைநகர் கசூரினாபீச்சில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவிலைச் சேர்ந்த 32 வயதான ஜெயகுரு என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஊர்காவல்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.