ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன என்று இலங்கை அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தபால் கட்டணங்களின் அதிகரிப்புக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் இதன்படி தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உள்ளூரில் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கான ஆகக்குறைந்த முத்திரையின் பெறுமதி 10 ரூபாவாக இருக்கும் என்று தெரியவருகிறது.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தபால் கட்டணங்களில் மாற்றம் கொண்டுவரப்படுவது வழமை.
எனினும் இம்முறை ஆறு வருடங்களுக்கு பின்னதாக தபால் கட்டணத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.