ஒருவர் வெட்டிக்கொலை: மூவர் கைது

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சனிக்கிழமை (6) இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் ஞாயிற்றுக்கிழமை(6) காலை கைதுசெய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் அல்லாரைச் சேர்ந்த என்.அன்பழகன் (26) என்பவர் உயிரிழந்ததுடன், மேலும் 8 பேர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மீசாலையில் ஆலய திருவிழாவொன்றில் சனிக்கிழமை (05) மாலை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பின் எதிரொலியாகவே இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மீசாலையினைச் சேர்ந்த 3 பேரை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.