ஐ.ம.சு.மு வேட்பாளர் அலுவலகத்தின் மீது தாக்குதல்

attack-attackஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் செவ்வேளின் அலுவலகத்தின் மீது வியாழக்கிழமை அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகாலை ஒரு மணியளவில் வாகனத்தில் வந்திறங்கிய பத்துக்கும் மேற்பட்ட ஆயுததாரிகளை கொண்ட குழுவினராலேயே செவ்வேளின் அலுவலகத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வந்து தனது சகாக்களுடன் கலந்துரையாடலில் செவ்வேள் ஈடுபட்டுள்ளார்.
இவ்வேளையில் இனந்தெரியாதவர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

வீட்டுக்குள் நுழைவதற்கான முயற்சி கைகூடாததையடுத்து வீட்டின் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்ததுடன் அங்கு வைக்கப்பட்டு இருந்த படத்திறக்கும் ஒயில் ஊற்றியும் கிழத்தெற்ந்து விட்டும் சென்றுள்ளார்கள்.

இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிசார் விசாரனைகளை மேற்க் கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் யாழ் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்தள்ளதாக வேட்பாளர் தெரிவித்துள்ளார்.