ஐ.ம.சு.கூ தேர்தல் பிரசாரம் யாழில் ஆரம்பம்

DSCF8039ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இன்று காலை 11.00 மணியளவில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கையினை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

இந்த தேர்தல் பிரசார ஆரம்ப கலந்துரையாடலில், நடைபெறவுள்ள வடமாகாண சபை வேட்பாளர்களான சின்னத்துரை தவராஜா, அங்கஜன் இராமநாதன், முடியப்பு ரெமீடியஸ், சர்வானந்தன், கந்தசாமி கமலேந்திரன், (கமல்), நடராசா தமிழ் அழகன், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின், யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஆதனைத் தொடர்ந்து, யாழ். 2 ஆம் குறுக்குத் தெருவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்திற்கான புதிய அலுவலகத்தினையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் திறந்து வைத்தனர்.