ஐ.ம.சு.கூட்டமைப்புடன் ஈ.பி.டி.பி, அ.இ.மு.க இணைந்து போட்டி ?

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்று ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியுடன் அமைச்சர் சுசில் பிமேரஜயந்த நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு நேற்று மதியம் 1 மணிக்கு அக்கட்சியின் யாழ். மாவட்ட
அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

EPDP-SLAPS

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராஜா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரும் பிரத்தியேக செயலாளருமான கே.என்.தயானந்தா மற்றும் அமைச்சரின் இணைப்பாளர் றொபின் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor