ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

47 உறுப்பு நாடுகளைக்கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

அதேவேளை இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான், லிபியா மற்றும் சூடான் உட்பட14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தமிழ் மக்கள் மற்றும் இலங்கை தொடர்பாக ஆழமாக சிந்தித்து இந்தியா செயற்பட்டுள்ளதாகவும் இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor