Ad Widget

ஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடப்பட்ட “போர்க்களத்தில் ஒரு பூ”!

ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் “போர்க்களத்தில் ஒரு பூ” என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது.

Isaippereya

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர் இசைப்பிரியா கொடூரமாக கொல்லப்பட்டது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரது வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டு கர்நாடகத்தைச் சேர்ந்த இயக்குநர் கு.கணேசன், “போர்க்களத்தில் ஒரு பூ” என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

அவருடைய கதையை அடிப்படையாக கொண்ட கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்டது இந்த தமிழ்ப் படம். இப்படத்தினை டைரக்டர் கணேசன் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts