Ad Widget

ஐ.நா.தீர்மானத்தை நிராகரிக்க முடியாது – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரிக்க முடியாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபடவேண்டும் எனவும் அழைப்பு விடுத்ததுடன் அரசியல் அமைப்புக்கு உட்பட்டே செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுமெனவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 30ஆவது கூட்டத்தொடரில் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா உட்பட நான்கு நாடுகளின் அனுசரணையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இது தொடர்பில் சர்வகட்சிகளினது கருத்துக்களைக் பெற்றுக்கொள்வதற்கான முதலாவது சர்வகட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்த்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட அக்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் தலா நால்வரும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எமது நாடு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பினரும் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைப்பதுடன் அது தொடர்பிலான விமர்சன ரீதியான கருத்துக்களையும் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனார்.

எம் நாட்டில் தற்போது உருவாகியுள்ள நிலைமையானது அனைத்து தரப்பினரும் தமது தனிப்பட்ட கருத்துக்களையும் விமர்சனங்களையும் வௌிப்படுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நாம் வரவேற்கின்றோம்.

ஐ.நா. தீர்மானத்தை முற்றுமுழுதாகப் புறக்கணிக்க வேண்டுமென சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கருத்துக்களை முன்வைக்கின்றன.ஐ. நா.தீர்மானத்தை நாம் புறக்கணிப்பதாலோ அல்லது நிராகரிப்பதனாலோ மாத்திரம் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை தீர்மானத்துடன் தொடர்புடைய அரசாங்கம் என்ற வகையிலும் இலங்கையின் பிரதான கட்சியென்ற ரீதியிலும் நாட்டுக்காகவும் எமது மக்களுக்காகவும் எம்மாலானவற்றை செய்ய வேண்டுமென்றே கருதுகின்றேன்.

ஆகவே அவற்றை முன்னெடுப்பது எவ்வாறு என்பது தொடர்பில் சர்வகட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். உங்களின்(சர்வகட்சிகளின்) ஆலாசனைக்கு அமைவாகவே அச்செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக அரசிலமைப்புக்கு அமைய இவ்விடயம் தொடர்பாக ஆராயவேண்டுமென நான் எதிர்பார்ப்பதுடன் அதற்குட்பட்டே செயற்பாடுகளை முன்னடுக்கப்படவுள்ளன.

பிரதான பரிந்துரைகளில் அதீத கவனம் வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக 2011ஆம் ஆண்டு மார்ச் 22, 2013ஆம் ஆண்டு மார்ச் 21, 2014 ஆண்டு மார்ச் 27 ஆகிய காலத்தில் இம்பெற்ற கூட்டத்தொடர்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவ்வாறிருக்கையில் அத்தீர்மானங்களுக்கும் தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிராகரம் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை நாம் கருத்திலெடுக்க வேண்டும். குறிப்பாக ஐ.நா. அறிக்கையில் மிகப் பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் நாம் அதீதகவனம் செலுத்த வேண்டும்.

முக்கிய பரிந்துரைகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பரிந்துரைகளில் மிக முக்கியமானதாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லாட்சிக்கான ஜனநாயக் கட்டமைப்புக்களை வலுப்படுத்தல், இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் விழிப்புணர்வு, வடக்கு, கிழக்கில் சிவில் பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியவற்றை கட்டியெழுப்பல்,மீள்குடியேற்றம், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதுடன் அவற்றுக்கு மதிப்பளித்தல், நிலக் கண்ணிவெடிகளை அகற்றல், பலவந்தமான ஆட்கடத்தல்களை முற்றாக நிறுத்தல், நிலக் கண்ணிவெடிகளை அகற்றல் ஆகியன காணப்படுகின்றன. இவை தொடர்பில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

எமது முக்கிய உறுதிமொழிகள்

அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பில் உண்மையைத் கண்டறிதல்இ காணாமல்போனவர்கள் கண்டறிவதற்கான செயலகத்தை நிறுவுதல்இ இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் உட்பட எம்மால் முன்வைக்கப்பட்டு சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகள் பல காணப்படுகின்றன. அவற்றை நாம் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகவேஇ ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்காது எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்தாலோசிப்போம்.

உங்களின் ஆலோசனையின் பிரகாரமே நடவடிக்கை

சர்வகட்சிகளின் பிரதிநிதிகள் இங்கு வருகை தந்திருக்கின்றீர்கள். உங்களின்ஆலோசனைக்கு அமைய இச்செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுப்போம். அதற்காக அனைவரும் ஒன்றுபடவேண்டியுள்ளது. இது எமது முதல் சந்திப்பாகும். இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவகையில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கான இன்னும் பல சந்திப்புக்களை தொடர்ந்தும் நடத்தவுள்ளோம்.

ஏற்றுக்கொண்டால் உபகுழு எழுத்து மூலமாகவும் தாருங்கள்

இவ்விடயம் தொடர்பான ஆராய்ந்து இறுதி முடிவெடுப்பதற்கு நீங்கள்(அரசியல் கட்சிகள்) ஆலோசனைகளை முன்வைப்பீர்களானால் உபகுழுக்களை அமைக்கவும் தயாரகவுள்ளேன். உபகுழு அமைப்பது என்பது எனது யோசனை மாத்திரமே நீங்கள் விரும்பினால் அது முன்னெடுப்பது குறித்து பேசலாம். அதேநேரம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தமது நிலைப்பாடுகள்இ கருத்துக்கள் தொடர்பாக அடுத்த இரண்டுவாரத்துக்கு முன்னதாக எழுத்து மூலமாக உங்களது பரிந்துரைகளை எமக்கு அனுப்பி வைக்கலாம். நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் அவை நாட்டுக்கும் எமது மக்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தாதவாறே மேற்கொள்வோமென்றார்.

Related Posts