ஐ.நா. தீர்மானத்தை இலங்கை முழுமையாக செயற்படுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிற்றர் பக்கத்திலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு பதிவிடப்பட்டள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை இலங்கை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தாமத நிலையினைப் பாதிக்கப்பட்ட தரப்பினரோ அல்லது சர்வதேசமோ ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிறுத்தியே நீதி வழங்கப்படவேண்டும் என்பதுடன், அவர்களுக்கான தீர்வுகள் விரைந்து பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் குறித்த டுவிற்றர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts