ஐ.நா. செயலாளர் நாயகமாக போர்த்துக்கல்லின் முன்னாள் பிரதமர் தெரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குட்டெர்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

antonio-guterres-un

ஐ.நா.வின் தற்போதை செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், இப் புதிய தெரிவு இடம்பெற்றுள்ளது.

67 வயதான குட்டெர்ஸ் ஐ.நாவின் அகதிகள் தொடர்பான நிறுவன தலைவராக கடந்த 2015ஆம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தார். அத்தோடு, ஐ.நாவின் ரஷ்ய தூதுவராகவும் பாதுகாப்புச் சபையின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.

பொறியியல் பட்டதாரியான குட்டெர்ஸ் 1976 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டில் ஜனநாயக தேர்தலில் போட்டியிட்டு முதன் முதலில் அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.

தொடர்ந்து இவர் ஆற்றிய சிறப்பான செயற்பாடுகளால் சோசலிச கட்சியின் தலைவராக 1992ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் 1995 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டின் பிரதமராக தெரிவானமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor