இலங்கைக்கு விஐயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடும் அதிகாரி பெப்பலோ டி கிறீப் குழுவினருக்கும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல் குரேவுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதய நிலைமைகள், மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் நிலைமைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்டுவரும் நடடிவக்கைகள் தொடர்பிலும் அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு அரசு முன்னெடுத்துவரும் பணிகள் தொடர்பிலும் ஆளுநர் பெப்பலோ டி கிறீப் குழுவினருக்கும் தெளிவுபடுத்தினார்.