ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் – யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபருடன் சந்திப்பு

Ukயாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் மற்றும் அவரது பாரியார் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கத்தினை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

நேற்று புதன்கிழமை மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன், அபிவிருத்தி தொடர்பாக விளக்கப் படங்களுடன் காண்பிக்கப்பட்டன.

யாழ். மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த வேளையில், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடியதுடன், யாழ். பொது நூலகம் மற்றும் நல்லூர் ஆலயத்திற்கும் சென்று பார்வையிட்டனர்.