ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2012ம் ஆண்டிற்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் சகல மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட்ட 2500 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். பரீட்சைப் பெறுபேறுகளுடன் வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் பிரகாரம் தமிழ் மொழி மூல மாவட்ட ரீதியிலான குறைந்த வெட்டுப் புள்ளிகள் வருமாறு,

கொழும்பு 149
முல்லைத்தீவு 145
கம்பஹா 149
மட்டக்களப்பு 147
களுத்துறை 149
அம்பாறை 147
கண்டி 149
திருகோணமலை 147
மாத்தளை 149
குருணாகல் 149
நுவரெலியா 145
புத்தளம் 143
காலி 149
அநுராதபுரம் 145
மாத்தறை 149
பொலன்னறுவை 145
அம்பாந்தோட்டை 140
பதுளை 146
யாழ்ப்பாணம் 148
மொனறாகலை 142
கிளிநொச்சி 146
இரத்தினபுரி 146
மன்னார் 146
கேகாலை 149
வவுனியா 146 –

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி அகில இலங்கை மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று காலி ரிஜ்மன்ட் கல்லூரி மாணவனான கே.௭ஸ். கொடித்துவக்கு மற்றும் தலாத்துஓயா கனிஷ்ட பாடசாலை மாணவி ஆர்.௭ம்.ஏ.யு. மதுவந்தி ஆகியோர் முதலிடங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மடட்டத்தில் தமிழ் மொழி மூல மற்றும் சிங்கள மொழி மூலமான அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களின தரவுகள் தற்போது தரப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இப்பரீட்சை முடிவுகள் கொழும்பு மாவட்டப் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை ௭டுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இப்பரீட்சை பெறுபேறு வெளியிடுவதற்கு முன் பல தடவைகள் நுணுக்கமாகப் பரிசீலனைகள் பல செய்யப்பட்டு பெறுபேறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகையால் இப்பரீட்சையின் விடைத்தாள்கள் மீள்பரிசீலனை செய்யப்படமாட்டாது ௭ன்றும் தங்களது பாடசாலையில் யாராயினும் பரீட்சார்த்தியின் பெறுபேறு நம்ப முடியாத வகையில் இருக்குமாயின் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அதிபரினாலேயே மனு செய்யப்பட வேண்டுமெனவும் இம்மனுக்கள் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் ஜயந்த புஹ்பகுமார சகல பாடசாலை அதிபர்களுக்கும் அறிவித்துள்ளார்.