இலங்கையில் ஐஎஸ். பயங்கரவாதியொருவர் ஊடுருவியுள்ளதாக இந்திய உளவுப்பிரிவை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவின் திருப்பூரில் அண்மையில் ஐஎஸ் தீவிரவாதியொருவர் கைதுசெய்யப்பட்டதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்தே தெரியவந்துள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தென்னிந்தியாவில் கைதாகிய மஜ்னு என்ற கைதிக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையில் தொடர்பிருக்கலாம் என நடாத்தப்பட்ட விசாரணையில், மஜ்னு என்பவர் ஐஎஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் எனவும் கொழும்பு ஊடகம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை குஹுல்லா வனாய் என்ற பெயரைக் கொண்ட இலங்கையர் ஒருவரும் குறித்த மஜ்னு என்பவருடன் தொடர்பில் இருப்பதாகவும், குஹுல்லா வனாயும் ஐ.எஸ் பயங்கரவாதிகளில் ஒருவர் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட மஜ்னு என்பவரிடம் மேலதிக விசாரணைகளை இந்தியப் புலனாய்வுத்துறை மேற்கொண்டு வருவதாகவும், குறித்த நபரின் சிறீலங்காத் தொடர்புகள் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.