ஏழாலையில் இளைஞரை காணவில்லை

missing personயாழ்ப்பாணம், ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை புதன் இரவு முதல் காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞரையே காணவில்லை என காணாமல் போனவரின் சகோதரியினால் நேற்றய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவர் யாழ். கலட்டி பகுதி மின் உருக்கு கடை ஒன்றில் வேலை செய்பவர் என்றும் புதன்கிழமை காலை வேலைக்கு சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என மேற்படி முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor