ஏப்ரல் முதல் அதிகரிக்கிறது ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு

2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் என்று அரச நிர்வாக, மாகாண சபைகள், உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஓய்வூதியர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 2,500 ரூபா மாதாந்த இடைக்கால கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமுல்படுத்தும் வகையில் அதற்கு மேலதிகமாக 1,000 ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.