ஏப்ரல் இறுதிவரை மின்வெட்டுத் தொடரும் – மின்சார சபை விளக்கம்

ஏப்ரல் இறுதியில் பருவகால மழைவீழ்ச்சி ஏற்படும்வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்” என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியாகும் நீர்வீழ்ச்சிகளின் நீர் வரத்துக்கு குறைவடைந்துள்ளது.

அதனால் கிடைக்கின்ற மின் உற்பத்தியைக் கொண்டு மின் வழங்கலை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் இறுதியில் பருவகால மழைவீழ்ச்சி ஏற்படும்வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்” என்று மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டுத் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள…

வடக்கு மாகாணம் – 0212024444

கிழக்கு மாகாணம் – 0265988988

மின்வெட்டு நேர அட்டவனையைப் பார்வையிடுவதற்கு

Related Posts