எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைக்கலாம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு

judgement_court_pinaiயாழ்ப்பாணம் கண்டி வீதி கச்சேரிப் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய எண்ணை கூட்டுத்தாபனத்தின் நிதியுதவியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். கிளையினால் கச்சேரிப்பகுதியில் அமைக்கப்பட இருந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு யாழ். மாநகர சபை இடைக்கால தடை விதித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அது தொடர்பிலான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. எற்கனவே மாநகர சபை அனுமதியை வழங்கியிருந்ததுடன் மக்களது எதிர்ப்புக்களை அடுத்தே இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

எனவே இடைக்கால தடையினை வாபஸ் பெறுவதாக யாழ்.மாநகர சபை சார்பான சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். அதனையடுத்து குறித்த இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.