எரிகாயங்களுக்குள்ளான இளைஞன் மரணம்

கடந்த 4ஆம் திகதி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் நிரப்ப சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றியதில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை(22) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த ரி.சிவதர்சன் (வயது 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.