எமது மக்களை கவலைப்படுத்துகின்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது – அங்கஜன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் மேற்கொண்டதாக கூறப்படும் செயல் உண்மையெனில் அது கண்டிக்கப்படவேண்டியதென யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமது மக்களை கவலைப்படுத்துகின்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor