எமது காணிகளை மீட்டுத் தாருங்கள்; மக்கள் போராட்டத்தில் குதிப்பு

வலி.வடக்கு மற்றும் வலி. கிழக்கு பகுதிகளில் பொது மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக தெல்லிப்பழை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை8 மணி முதல் மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறீதரன்,தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொது செயலாளர் வி்.ஆனந்த சங்கரி,மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த பாஸ்கரா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவர்களுடக் பிரதேச சபைத் தலைவர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெரும்பாலானவர்கள் திடண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, இந்தப் போராட்டத்துக்கு மக்களை ஏற்றியிறக்கும் பணிகளில் எந்தவொரு மினி பஸ்ஸும் ஈடுபடக்கூடாது என்று “இராணுவப் புலனாய்வாளர்கள்’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட சிலர், மினிபஸ் உரிமையாளர்களின் வீடுகளுக்குச் சென்று எச்சரித்துள்ளனர் என்று நேற்றுத் தெரிவிக்கப்பட்டது.