என்னை செம்மறி என நினனக்காதீர்கள்! மாகாண சபை அமர்வில் சீறினார் சிவஞானம்!!

மாகாண சபை அமர்வை நடத்த விடாது குழப்பிக் கொண்டிருந்த உறுப்பினர்களிடம் “என்னை செம்மறி என்று நினைத்துப் பேசிக்கொண்டிருக்காதீர்கள்” என சீறினார் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

நேற்று நடந்த வடக்கு மாகாண சபையின் 52 ஆவது அமர்வில் நிரந்தரக் குழுக்களுக்கான தெரிவு இடம்பெற்றது. அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.

அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உறுப்பினர்களை கட்டுப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியாது போகவே “என்னை செம்மறி என்று நினைத்துப் பேசிக் கொண்டிருக்காதீர்கள்” என சீற்றத்துடன் கூறினார். இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் அமைதியடைந்தனர். இதன்பிறகே அவரால் அமர்வைத் தொடர்ந்து நடத்த முடிந்தது.

இதன்போது எழுந்த உறுப்பினர் சயந்தன் “அவைத் தலைவர் செம்மறி என விளித்தது அவைக்குப் பொருந்தாது எனவே அச்சொல்லை பதிவில் இருந்து நீக்க வேண்டும்” என வலியுறுத்தினார். ஆனால் அவைத் தலைவரோ அச்சொல்லைப் பதிவில் இருந்து நீக்க மறுத்து விட்டார்.

Related Posts