“என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்” – அங்கஜன்

angajan-won“என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்” என தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மக்களுக்கு நன்றி கூறும் வகையில் அங்கஜன் அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அதில் மேலும் தெரிவிக்னையில்

விழுதாக நிற்கும் என் வெற்றிக்கு விதையூன்றி நீருற்றிய எனதன்பு உறவுகளே !
எனது வெற்றிக்கு நானும் நீங்களும் கடந்து வந்த பாதைகள் கனதியானவை, கரடு முரடானவை. என்னை ஒரு வெற்றியாளனாக்கிய உங்களுக்கு தெரியும் , இந்த வெற்றி இலகுவாக சுவைக்கப்பட்ட ஒன்றல்ல என்பது. நான் ஆரம்பம் முதலே சொல்லி வந்தது போல், மக்கள் சரியானவர்களை இனங்காணுவர்கள் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்.

என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றிருக்கிறீர்கள்.நேர்மையான அரசியலுக்கு ஒரு அங்கீகாரம் தந்திருக்கிறீர்கள். இளைய சமுதாயத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் வாக்குளால் உங்கள் பிரதிநிதியாக்கிருக்கிறீர்கள். நாளைய சமூகத்தை நல்ல பாதையில் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பரிய பொறுப்பைத் தந்திருக்கிறீர்கள்.

நீங்கள் என்னை விட கடுந்துயர் அடைந்துதான் எனக்கு இந்த வெற்றியை அளித்திருக்கின்றீர்கள். உங்கள் துன்பங்களை நானும் நன்கறிந்தவன். பல முனைகளில் நான் எதிர் நீச்சல் போடுவதற்கு எனக்கு ஊக்கிகளாகவும் உந்துதல் சக்திகளாகவும் இருந்து செயற்பட்டவர்கள் நீங்கள். உண்மையில் நீங்கள் ஒவ்வொருவரும் நல்ல பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். இதில் நான் கற்றதும், கற்றுத் தெளிந்ததும் பல…இதற்காக வெறுமனே நன்றி மட்டும் சொல்லி நில்லாமல் அதற்கும் மேலாக உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாயிருந்து, கடந்த காலங்களை விடவும் அதிக நேரத்தை உங்களுக்காக ஒதுக்க வேண்டிய கடமை என்னிடம் வந்திருக்கிறது. ஆயினும் நான் உங்கள் வழி நின்று எத்துணை இடர்கள் வரினும் அத்தனையும் தாண்டி உங்களுக்காக களம் காண்பேன் என்பதனை உறுபடத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்தச் சந்தர்பத்தில் என் வெற்றிக்காக உழைத்த என்னினிய சகோதரர்களை மறந்துவிடமுடியாது. எத்தனை இடர்கள், தடைகள் வந்திருந்த போதிலும் அத்தனையையும் எனக்காக தமதாக்கி, என் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் காலத்தால் மறவாத நன்றி பல……எனது வெற்றி அவரகளின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி. எனது வெற்றி இளைஞர்களுக்கான வெற்றி. குறிப்பாக தம் சிரமம் பாராமல் பணி செய்த சகோதரிகள் மறக்கப்பட முடியாதவர்கள். என்னுடைய வெற்றியை வேண்டுமானல் கட்சி வைத்துக் கொள்ளட்டும். நீங்கள் தந்த அங்கீகாரத்தை நான் வைத்திருக்கவே ஆசைப்படுகிறேன்.இந்த அங்கீகாரத்தை நேர்மையான அரசியல் பயணத்திற்காக நீங்கள் அமைத்துத் தந்த பதையாகப் பார்க்கிறேன்.

என்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவதனை கடமையாக நினைத்த உங்கள் அனைவருக்கும் நன்றி. முகம் காட்டாமல் இருந்து எனக்காக உழைத்த வர்களுக்கும், என்னோடு நின்று தோழமையோடு செயற்பட்டவர்களுக்கும், நடுநிலமை காட்டி வந்த ஊடக நண்பர்களுக்கும், உடல் உள வலிமையை தந்து எம்மை ஆதரித்த எல்லாச் சொந்தங்களுக்கும் உணர்வு கலந்த நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்படிக்கு
அன்றும் , இன்றும் என்றும் உங்களில் ஒருவனாய்
அங்கஜன் இராமநாதன்.

இவ்வாறு அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது