எனது அரசியல் பாதையில் இளைஞர்களும் இணைந்துள்ளனர்: அங்கஜன்

angajanஎன்னுடைய அரசியல் பாதையானது தனியானது. மற்றவரின் பாதைகளை பின்பற்றி செல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் செல்லும் பாதை தவறானது. சரியான பாதையில் மக்களை வழிப்படுத்த வேண்டிய கடப்பாடு இளைஞராகிய எனக்கு இருப்பதால் எனது பாதையை தனியானதும், சரியானதுமாக கொண்டு செல்கின்றேன். இப்பாதையில் என்னுடைய இளைஞர்களும் சேர்ந்து வருகின்றானர்’ என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பு ஒன்று அளவெட்டி மேற்கு கலைமகள் சனசமூக நிலைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது

இச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘மாகாண சபைத் தேர்தல் களத்தில் நிற்கும் சிலர் உரிமைகள், சுயநிர்ணயம் என பலவற்றை பேசுகின்றனர். உண்மையில் அபிவிருத்திகளை மட்டுமே செய்யக்கூடிய மாகாணசபைக் கட்டமைப்புக்கான தேர்தலே இது. எனவே எமது பிரதேச அபிவிருத்தியை கருத்தில் கொண்டு சரியான வேட்பாளர்களை தெரிவு செய்யவேண்டிய பொறுப்பு எல்லோரிடமும் உள்ளது.

ஏனைய மாகாணங்களில் அபிவிருத்திகளை மிகத் திறமையாக முன்னெடுக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தை எடுத்துப் பார்த்தால் அவர்கள் மாகாணத்துக்கான அபிவிருத்திகளை மாகாணசபையின் ஊடாக எடுத்துக் கொண்டு உரிமைகளுக்காக நாடாளுமன்றில் விவாதிக்கின்றார்கள்.

இப்பிரதேச மக்கள் தமது கல்வியில் காட்டும் ஆர்வமும், அக்கறையும் பாராட்டத்தக்கது. ஆனால் இவர்களுக்கான வளங்கள் இன்னும் வழங்கப்பட வேண்டும். இங்குள்ள பாடசாலையின் கட்டுமானங்கள், ஆசிரிய வளங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நாங்கள் எமது பிரதேசத்தை கட்டியெழுப்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களுக்கு தேவையான அனைத்தும் இம் மாகண சபையில் நிறைவேற்றப்பட வேண்டும். மக்களுடன் மக்களாக கதைக்கும்போதே மக்கள் பிரச்சனைகள் கண்டறியப்படும். அதைவிடுத்து மேடையில் பலர் மத்தியில் பேசிவிட்டு சென்றால் அவ்வாறனவர்களால் என்றுமே மக்கள் பிரச்சனை தீர்க்கப்பட மட்டாது. ஆகவே மக்களுடன் அருகில் இருக்கும் அரசியலையே நாம் மேற்கொள்கின்றோம்’ என்றார்.

 

angajan-alaveddy (1)

angajan-alaveddy (2)

Related Posts