எதிர்வரும் 30ம் திகதி முதல் வடமாகாண மருத்துவ சேவைகள் பாதிப்புறும்?

யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மீதான விசாரணை தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு கோரிக்கையை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வட மாகாணம் தழுவிய தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.யாழ். போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மருத்துவமனைப் பணிப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பக்கசார்பின்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து உறுதிப்படுத்துமாறு கோரி எதிர்வரும் 30ம திகதி காலை 8 மணி முதல் தொடர் தொழிற்சங்கப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் கலந்துரையாடலில் இவ்விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக அதனது தலைவர்
சந்திக எப்பிட்டிக்கடுவ, அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 30ம் திகதி காலை 8 மணி முதல் வட மாகாண மருத்துவமனைகளில் அரச மருத்துவ அதிகாரிகள் தமது பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை மேற்கொள்ளவர் என அவர் தெரிவித்துள்ளார்..