எங்கு வாங்கினாலும் இனி ஒரே விலைதான்!!

கொழும்பு எரிபொருள் நிலையங்களில் டீசல், பெற்றோல் விற்கப்படும் விலைக்கு 50, 60 சதம் அதிகமாக வேறு பகுதிகளில் விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று (01) தொடக்கம் அந்த நடவடிக்கை நிறுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று தொடக்கம் முழு இலங்கையிலும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரே விலைக்கு விற்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறிசேன அமரசேகர தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டங்களுக்கு எரிபொருள் எடுத்துச் செல்லப்படும் போக்குவரத்து செலவை ஈடுசெய்யவென வேறு மாவட்டங்களில் பெற்றோல் மற்றும் டீசல் கொழும்பிலும் பார்க்க அதிகமாக விற்கப்பட்டது.

எனினும் இன்று தொடக்கம் போக்குவரத்து செலவை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக் கொள்ளும் என சிறிசேன அமரசேகர குறிப்பிட்டார்.