எகிப்தின் போர்நிறுத்த யோசனை: இஸ்ரேல் ஒப்புதல், ஹமாஸ் நிராகரிப்பு

காசாவிலுள்ள பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸுடன் கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்துள்ள யோசனையை பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

istralee_gaza_attack

ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இந்த யோசனையை, சரணடைவதற்குச் சமம் என்று வர்ணித்து நிராகரித்துள்ளது.

இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள ஹமாஸ் உறுப்பினர்களை அது விடுவித்து, காசா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அகற்ற எகிப்துடன் இஸ்ரேல் சேர்ந்து செயலாற்றாத வரையில், இஸ்ரேலுடனான தமது மோதல் வலுக்கவே செய்யும் என்று ஹமாஸின் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தாம் தாக்குதலை நிறுத்திய பின்னரும் காசாவில் இருந்து ரொக்கெட்டுகள் வந்து விழுந்துள்ளதாக இஸ்ரெல் கூறுகிறது.

ஆனாலும் ஆட்சேதமோ பொருட்சேதமோ இருந்ததாக தகவல்கள் இல்லை.

கடந்த ஒருவார காலத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் பொதுமக்கள் பெரும்பான்மையாக பாலஸ்தீனர்கள் கிட்டத்தட்ட இருநூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor