ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

nallur-pirethesasbhaகடந்த ஞாயிற்றுக் கிழமை நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் மீது கோண்டாவில் பகுதியில் வைத்து இனந்தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பிரதேச சபையின் வாகனம் ஒன்றும் சேதமாகியுள்ளது.

மேற்படி ஊழியர்கள், கழிவுகளை கோண்டாவில் பகுதியில் அகற்றிக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவர்களைத் தாக்கியுள்ளதுடன் பிரதேச சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தையும் சேதமாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் நல்லூர் பிரதேச சபையில் கடமையாற்றும் த.குணசேகரம், கு.விபுந்தன், ச.ஜெகதீஸவரன் ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுடிருந்தனர்.

இவ் சம்பவத்தினை கண்டித்து பிரதேச சபைக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.