ஊரெழு கிராமத்தின் அபிவிருத்திக்கு 25ஆவது விஜயபாகு காலாட்படை உறுதி

Ureluஊரெழு கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.

இந்த பகுதியில் உள்ள 25ஆவது விஜயபாகு காலாட்படை இராணுவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் 25ஆவது காலாட் படை மேஜர் கே.ஏ.ஆர்.ஜயசிங்க கலந்துகொண்டார்.

இதன்போது, ஊரெழு பகுதி மக்களின் சுகாதாரம், கல்வி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதேவேளை, ஊரெழு கிராமத்தில் உள்ள மக்களின் அபிவிருத்திக்கு இராணுவம் தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக 25ஆவது காலாட்படை மேஜர் கே.ஏ.ஆர்.ஜயசிங்க உறுதியளித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி கலந்துரையாடலில், அப்பிரதேசத்தின் சமூக பிரதிநிதிகள் உட்பட மக்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor