ஊடகங்களின் நம்பிக்கையூட்டலின்மையே மக்களின் புலம்பெயர்வுக்கு காரணம்: டக்ளஸ்

daklausஎதிர்காலம் தொடர்பான நம்பிக்கை அற்ற நிலையிலேயே மக்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்கின்றார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றயதினம் டி.டி. தொலைக்காட்சி நிலையத்தினை ஆரம்பித்து வைத்து, ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடும்போதே இதனை அவர் தெரிவித்தார்.

ஊடகங்கள் தொடர்ந்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளையே வழங்கி வருகின்றன. எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையை ஊடகங்கள் மக்களுக்கு ஏற்படுத்தாத காரணத்தினால் மக்கள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியா நோக்கி செல்கின்றார்கள் என்றார்.

அத்துடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்தா அரசாங்கத்துடன் இணைந்தா? என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் இது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.