உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தல் அவசியம்; சரவணபவன் எம்.பி

saravanabavan_CIஉள்ளூர் வர்த்தகர்கள் எமது பிரதேசத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கரவெட்டிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்றது.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,

வெளியூர் வியாபாரிகள் வருவதைத் தடுக்க வேண்டும். எமது வியாபாரிகள் கடன் பெற்றே முதலீடு செய்து வியாபாரம் செய்துவருகின்றனர். பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது கஷ்டப் படுகின்றனர். அவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

எமது பகுதிகளுக்குத் தற்காலிகமாக வந்துபோகும் வர்த்தகர்கள் கொழும்பில் உள்ள தொழிற்சாலைகளில் அரைகுறையாக உற்பத்தி செய்யப்பட்ட தரம் குறைந்த பொருள்களையே கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கின்றனர். அவர்களை விடுத்து உள்ளூர் வியாபாரிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.

உடுப்பிட்டி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க அபிவிருத்தியை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் சிரமங்களை சங்கத் தலைவர் எஸ்.நாகலிங்கம் விவரித்தபோது அது தொடர்பாக வேண்டிய உதவிகளைப் பெற்றுத்தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உறுதியளித்தார். அது தொடர்பாகத் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு சங்கத் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் நெல்லியடி வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.அகிலதாஸ் தனதுரையில் தெரிவித்ததாவது:
நெல்லியடி நகரத்தில் மின்குமிழ்கள் பொருத்த லட்சக்கணக்கான ரூபாவுக்கு அவற்றைக் கொள்வனவு செய்து எமது சங்கம் வழங்கியுள்ளது. அவை பழுதடைந்த போதெல்லாம் திருத்த வேலைகளையும் செய்து கொடுக்கின்றோம்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் நடத்தும் மக்கள் நலத்திட்டங்களுக்கும், மற் றும் உள்ளூர் பொது அமைப் புக்களுக்கும் அடிக்கடி நிதி உதவிகளை வழங்கி வருகின்றோம்.

இந்த நிலையில் வெளி யூர் நடமாடும் வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட அனுமதிப்பதால் உள்ளூர் வர்த்தகர்களாகிய நாம் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம்.

எனவே, வெளியூர் வியாபாரிகளின் வியாபாரத்துக்கு இந்தப் பிரதேசத்தில் தடை விதிக்குமாறு கோருகின்றோம் எனக் கோரிக்கை விடுத்தார். மேற்படி கூட்டத்தில் கரவெட்டிப் பிரதேச சபைத் தலைவர் பொ.விவேக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர