உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் – திருவாகரன்

Theruvakaranஇலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை (மாகாண, பிரதேச, நகர சபைகளை) சேர்ந்தவர்கள் கொள்ளை, கொலை மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக வடமாகாண உள்ளூராட்சிச் செயலாளர் எஸ்.திருவாகரன் தெரிவித்தார்.

தேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியை வலுப்படுத்தல் என்ற தொனிப்பொருளிலான வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு, யாழ். ரில்கோ சிற்றிக் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.

பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற இணையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்தவர்கள் செய்யும் சமூகவிரோதச் செயற்பாடுகள் காரணமாகவே அவர்களை பொதுமக்கள் வெறுக்கின்றனர்’ என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்தி

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் – முதலமைச்சர் சி.வி