பொறுப்புக்கூறுவதற்கான உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை சிறீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சிறீலங்காவின் தொழிற்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுபற்றித் தெரிவிக்கையில்,
விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிதிபதிகளை அனுமதிக்காவிடினும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப்போல் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை சிறீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
காணாமற்போன செயலகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையும் உள்ளது. உள்நாட்டுப் பொறுமுறை ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது.
போரின்போது 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா ஒருபோதும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை.
கோடன் வைஸ் எழுதிய நூலை மட்டுமே ஐ.நா மேற்கோள்காட்டியிருந்தது. தருஸ்மன் அறிக்கையிலும் அதுவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சிறீலங்கா இன்னமும் கடுமையாக முன்னேறவேண்டியுள்ளது. நிலமைகளை முன்னேற்றுவதற்கு இன்னும் அதிகம் செய்யவேண்டியுள்ளது.
நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை அடைவதற்கு உறுதி பூண்டுள்ளோம் என்பதை தொடர்ச்சியாக வெளிப்படுத்தவேண்டிய தேவை உருவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.