‘உளவியல் ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தி ஊடகங்களை முடக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன’

saravanabavan_CIஉளவியல் ரீதியில் அச்சத்தை உண்டு பண்ணி ஊடகங்களை முடக்குவதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.புத்தூர் பகுதியில் தினக்குரல் நாளிதழ் இனந்தெரியாத நபர்களினால் எரிக்கப்பட்டது சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

‘யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஊடகங்கள் மீதான அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு விநியோகத்திற்காக எடுத்துச் செல்லப்படும் பத்திரிகைகள் எரிக்கப்படுவது உளவியல் ரீதியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி ஊடகங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கையே.
இவ்வாறான நடடிவடிக்கைக்கு நாம் ஒரு போதும் அஞ்சத்தேவையில்லை.

காலம் காலமாக அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை அடக்குவதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. அவ்வாறான ஒரு வழியே உளவியல் ரீதியாக ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்களை மீதான தாக்குதல்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor