உலக ஊடக சுதந்திர தினம், ஊடக சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனத்தின் பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி வருடாந்தம் மே 3ஆம் திகதி ஊடக சுதந்திர தினமான ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆபிரிக்கப் ஊடகங்கள் கூட்டாக இணைந்து, 1991ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி �ஊடக சுதந்திர சாசனத்தை முன்வைத்தனர்.
இந்த நாளில் ஊடக சுதந்திரத்துக்காகப் பங்களிப்பு செய்யும் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது.