Ad Widget

உரும்பிராய் வரை ஊடுருவியது கழிவு எண்ணெய்

உரும்பிராய் சந்திப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணறு ஒன்றில் கழிவு எண்ணெய் நீரில் மிதப் பது வீட்டு உரிமையாளரால் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. உரும்பிராய் சந்திக்கு அண்மையில் மேற்குப் பக்கமாக 100 மீற்றர் தொலைவி லுள்ள வீட்டுக்கிணறு ஒன்றிலிருந்தே நீரில் கழிவு எண்ணெய் மிதப்பது அவதானிக்கப் பட்டுள்ளது.

உரும்பிராயைச் சேர்ந்த பாலவண்ணன் என்பவரது வீட்டுக்கிணற்றிலிருந்தே இவ்வாறு கழிவு எண்ணெய் மிதப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு, மூன்று தினங்க ளாக கிணற்று நீரில் எண்ணெய் படிந்திருப்பது போன்று காணப்பட்ட தாகவும் இது நாளுக்கு நாள் அதி கரித்துச் செல்வதை மிகத் தெளிவாகக் காணக்கூடியதாக இருப்பதாகவும் பிரஸ்தாப வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த எண்ணெய்க் கசிவு தொடர் பாக சுகாதாரப் பகுதியினருக்கு அறி விக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதேவேளை அயல் வீடுகள் சில வற்றிலும் கழிவு எண்ணெய் கிணற்று நீரில் மிதப்பதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு நாளுக்குநாள் கழிவு எண்ணெய் பரவி குடாநாட்டு நீரில் கலந்து பெரும் பாதகத்தை விளைவிப்பது குறித்து மந்தகதியில் நடவடிக்கைகள் இடம் பெறுவது குறித்துப் பலரும் கவலையடைந்துள்ளனர்.

எனினும் இந்தப் பிரச்சினையின் தீவிரம் குறித்து சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாக இல்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சுன்னாகத்தில் இரு ந்து மருதனார்மடம் இணுவில் பகுதிகளுக்கு இந்த எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது உரும்பிராய் பகுதியிலும் இந்த எண்ணெய்க் கசிவு அவதானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த எண்ணெய்க்கசிவு தொடர்பாக ஆராய்வதற்கு 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை அறிவித்துள்ளது.

எது எவ்வாறாகவிருப்பினும் இந்த எண்ணெய்க்கசிவின் விபரீதத்தை உணர்ந்து விரைவாக தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பட்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts