உயிருடன் இருக்கும் போதே மரணக் கொடுப்பனவுக்கு விண்ணப்பம்

cashயாழ்ப்பாணத்தில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய மரணக் கொடுப்பனவை வழங்குமாறு விண்ணப்பித்துள்ள சுவாரசியமான சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.

யாழ்-மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் அங்கத்தவர்கள் மரணித்தால் 10 ஆயிரம் ரூபா வழங்கி வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் கொக்குவில் மேற்கைச் சேர்ந்த ஒருவர் அவ்விதம் சங்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்து இருக்கிறார்.

விண்ணப்பித்ததுடன் நின்று விடாமல் அடிக்கடி சங்கங்களுக்குப் போய் நெருக்கடி கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் அவருக்கு மரணத்தின் பின்பாக வழங்கப்பட வேண்டிய மரணக் கொடுப்பனவை சங்கம் முன்னதாகவே வழங்கிவிடவும் தீர்மானித்திருப்பதாகவும் தெரியவருகிறது.

Related Posts