உயிரிழந்த மீனவர்களுக்கு வடக்கில் அஞ்சலி செலுத்த தீர்மானம்

fishing-boat_CIதெற்கில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் ஒரு நாள் கடற்றொழில் ஈடுபடாமல் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ். குருநகர் கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்தார்.

கடற்றொழிலாளர்களுடன் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அண்மையில், தென் மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக சுமார் 100 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட இழப்பினையும் மீனவர்களை நினைவு கூறும் வகையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற இன,மொழி வேறுபாட்டிற்கு அப்பால் கடற்றொழிலாளர்கள் என்ற ரீதியில் ஒரு நாள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடாமல் அஞ்சலி செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இத்தீர்மானத்தினை, நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ணவுடன் இன்று கலந்துரையாடவுள்ளதாகவும் இக்கலந்துரையாடலின் பின்னர் திகதி, நேரம் தீர்மானிக்கபடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.